உலகின் மிகப்பெரிய விமானம் வெற்றிகரமாக மேலெழும்பிப் பறந்திருக்கிறது.  இந்த விமானத்தை Stratolaunch என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. மிகப்பெரிய 385 அடி நீள இறக்கையைக் கொண்ட இந்த விமானத்தில் இரண்டு உடற் பகுதிகள் இருக்கின்றன, ஆறு இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ராக்கெட் ஏவுவதற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.