பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக காயமடைந்த அல்சாரி ஜோசப்புக்குப் பதிலாக மலிங்கா அணிக்குத் திரும்பியிருக்கிறார். பெங்களூரு அணி, கடந்த போட்டியில் களமிறங்கிய அதே லெவனுடன் களம் காண்கிறது.