தேர்தல் பிரசாரத்தின்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனப் பேசிய கமல்ஹாசனைக் கண்டித்து நாகர்கோவிலில் இந்து அமைப்பினர் அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினர்.