சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கத்திரிமலை அடிவாரம் குத்தேரிக்கல்காடு என்ற பகுதியில் ஒரே இடத்தில் 200க்கும் மேற்பட்ட 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்படுக்கை, கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இதைக் கண்டுபிடித்த வரலாற்று ஆர்வலர்கள்.