ராமேஸ்வரம் அருகே ஓலைகுடா உள்ளிட்ட கடலோரப்பகுதிகளில் கடல் சுமார் 100 மீட்டர் முதல் 200  மீட்டர் தூரம்வரை உள் வாங்கியுள்ளது. இதன் விளைவாகக் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிச் சேதமடைந்து கரை ஒதுங்கியுள்ளன. இந்த சேதத்தினால் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்லவில்லை.