வேலூர் வி.ஐ.டி பல்கலைக் கழக விடுதியில் 10 நாளில் 2 மாணவிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டது. இதற்கு உடந்தையாக போலீஸ் அதிகாரிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்களின் இறப்புக்கான காரணம் `தற்கொலை’ என்ற ஒற்றை வரியோடு மூடிமறைக்கப்படுவதால் வி.ஐ.டி மீது பெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது.