காஷ்மீரில் விவசாயம்தான் முக்கியத்தொழில். கிட்டத்தட்ட 80% மக்கள் விவசாயத்தைச் சார்ந்துதான் இருக்கிறார்கள். இதுவரை காஷ்மீரிகளுடைய நிலம் காஷ்மீரிகளின் கையில் மட்டும் இருந்தது. இனி அப்படி இருக்காது. தொழில் நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள் நிறைய உருவாகும் என்பதால் காஷ்மீரின் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது என்கிறார்கள்!