கோவை நீதிமன்றம் அருகில் உள்ள கே.ஜி.மருத்துவமனையின் வளாகத்திலும் அன்னபூர்ணாவின் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, மருத்துவமனையின் சுற்றுச்சுவரையொட்டியுள்ள அன்னபூர்ணா உணவகத்தின் சமையல் அறைக்கூடம் இடிக்கப்பட்டது. இதற்கு கே.ஜி. நிர்வாகம்தான் காரணம் என்று புகார் எழுந்துள்ளது.