'2.0' படத்துக்கு சப்-டைட்டில் வேலைகள் பார்த்ததற்காகத் தனக்கு சம்பளம் இன்னும் தரப்படவில்லை எனக் கூறியிருந்தார் ரேக்ஸ். இது குறித்து அவரிடம் பேசினோம். `படத்தின் ரீல்களை க்யூபுக்கு அனுப்பச் சொன்னார்கள். நானும் அனுப்பிவிட்டேன். ஆனா, இப்போ வரைக்கும் அவங்ககிட்டருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை' என்று வேதனை தெரிவிக்கிறார்.