திரிணாமுல் காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் நட்பு பாராட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. `நம் இருவருக்கும் பொதுவான எதிரி பா.ஜ.க' என்னும் நேர்கோட்டில் இருவரும் இணைகிறார்கள். ஏற்கெனவே நல்ல உறவு இருக்கும் நிலையில், சோனியா இடைக்கால தலைவராகப் பதவியேற்றிருப்பது இந்தக் கூட்டணியை சாத்தியப்படுத்தும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.