திரைப்படங்கள் வெளியான அன்றே அதை தங்களது Jio FDFS சேவையின் மூலம் வீட்டிலிருந்தே பார்க்கலாம் என்று ஜியோ அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக PVR, ஐநாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. `வீட்டில் படத்தைப் பார்த்தாலும், திரையரங்கில் கண்டுகளிக்கும் அனுபவத்தை அது தராது' என்பது அந்நிறுவனங்களின் வாதம்.