கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின்போது அரசு நலத்திட்டங்கள் குறித்து செவிலியர் பயிற்சிக் கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்களுக்குப் பதில் தெரியாமல் போகவே, விளக்கம் கேட்டு செவிலியர் கல்லூரி முதல்வருக்கு மெமோ அளிக்க அமைச்சர் உத்தரவிட்டார்.