ரயில்களில் கொள்ளையடித்தது தொடர்பாக சாகுல் ஹமீது என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 ஏடிஎம் கார்டுகளைத் திருடி, அதில் இருந்த பணத்தை எடுத்ததாக பெண் இன்ஸ்பெக்டர் கயல்விழி மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்.