இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவா மைதானத்தில் 22 -ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளின் முடிவில் கோலி 51 ரன்களுடனும், ரஹானே 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நல்ல நிலையில் இருக்கிறது.