அமெரிக்காவின் அட்லாண்டாவில் பிஜிஏ டூர் சாம்பியன்ஷிப் கோல்ப் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.  அப்போது மைதானத்தில் திடீரென மின்னல் தாக்கியது. இதில் மரத்துக்கு அடியில் நின்றிருந்த ரசிகர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.