‘ ரயில்வேயில் தமிழ் மொழி தெரியாதவர்களை நியமனம் செய்வது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக, இவர்களுக்கு இங்கே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. ரயில்வேயில் தமிழக இளைஞர்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும்' என அதிகாரிகள் கூட்டத்தில் எம்.பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்