சென்னை உயநீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமானியின் பணிக்காலம் 2020 அக்டோபர் மாதத்தோடு நிறைவுபெறுகிறது. ஓய்வுபெறுவதற்கு ஓராண்டு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், பணியிட மாற்றத்தில் அதிருப்தி வெளிப்படுத்தி, நாட்டின் முக்கிய நீதிமன்றங்களுள் ஒன்றின் தலைமை நீதிபதி பதவி விலகியிருப்பது, நீதித்துறையில் பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.