`மோடி பதவியேற்று, செப்டம்பர் 6-ம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடைந்துவிட்டன. எந்த ஓர் அரசும் செய்யத் துணியாத காரியங்களை, கனகச்சிதமாகச் செய்துவருகிறது இந்த அரசு. ஆனால் பொருளாதார மந்தநிலை, மோடி அரசுக்கு சற்று அயர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதனால், ‘100 நாள்கள் ஆட்சி சாதனை’ என்று கொண்டாட முடியாமல், அவர்கள் ரொம்பவே தவிக்கின்றனர்.