வீடுகள், கடைகளில் இருந்து கிடைக்கும் காய்கறி, பழங்கள் போன்ற மட்கும் குப்பைகளை விரைவில் உரமாக்கும் வகையில் சிவகாசி நகராட்சி நுண் உரக்குடில் மையத்தில் ஆடு, கோழி, வாத்து, முயல் போன்ற கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கோழி, வாத்துகள் குப்பைகளைக் கிளறுவதால் விரைவில் உரமாக மாற்ற முடியும் என்கிறார்கள்.