அரசுக்கு எதிரான பேரணி நடத்த மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் தயாராக இருந்தனர். ஆனால், அவர்களை சாலையில் இறங்கிப் போராடவிடாமல் தடுத்துவருகிறது ஆந்திர போலீஸ். மேலும் சந்திரபாபு நாயுடு, அவரின் மகன் நர லோகேஷ் மற்றும் டி.டி.பி தலைவர்கள் போன்ற பலரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.