சென்னை முருகன் இட்லி கடை சாதத்தில் புழு நெளிந்துள்ளது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் பிரபாகரன், மேலாளரிடம் தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், ``முருகன் இட்லி கடை மீது கொடுத்த புகாரின்பேரில் ஆய்வு நடத்தி 10-ம் தேதி நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றார்.