வங்கதேச கிரிக்கெட் வீரர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர்களுக்கு வங்கதேசத்தில் வழங்கப்படும் ஊதியம் மிகக் குறைவாக உள்ளதாகவும் இதைக் கொண்டு எப்படி ஆரோக்கியமான வாழ்வை கடைபிடிக்க முடியும் என மூத்த முன்னணி வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.