வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அறிவரசன் என்பவரின் இளைய மகள் திவ்யாவும் (12) டெங்கு காய்ச்சலுக்குப் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அக்காள் புவியரசி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகிறார்கள்.