பா.ஜ.க தலைவரும் எம்.பி-யுமான திலீப் கோஷ், `பசுவின் பாலில் தங்கம் இருக்கிறது' என பேசியிருந்தார். இதை குறிப்பிட்டு மேற்குவங்கத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், தன் பசுவுடன் அப்பகுதி தனியார்  தங்கநகைக் கடன் வழங்கும் நிறுவனத்தில் மாட்டுக்கு தங்க கடன் வழங்குமாறு கேட்டுள்ளார். இது திலீப் கோஷ் மீது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.