கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 22 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேனிக்கு ஒரு கால்நடை ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்துள்ளது. நாளை முதல் கால்நடை ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.