நீலகிரியில் குன்னூர் பேரக்ஸ் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காட்டுமாட்டினை இரண்டு இளைஞர்கள் தொந்தரவு செய்துள்ளனர். மாட்டின் அருகில் சென்று செல்பி எடுத்து இதனை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வலைத்தளங்களில் பரவி வருகிறது. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காதது காட்டுயிர் ஆர்வலர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.