``கேரள காவல்துறையினர் எங்க அண்ணனை என்கவுன்டர் செய்யவில்லை. சித்ரவதை செய்து அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். அட்டப்பாடி அரசு மருத்துவமனையின் பிண அறையில் என் அண்ணன் மணிவாசகத்தின் உடல் இருந்தது. ரெண்டு நாள்கள் கழித்து நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே பார்த்தோம்.'' என்று கதறுகிறார் மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் கடைசி தங்கை லட்சுமி.